கார்த்தியின் பெரிய பட்ஜெட் படம்
கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தை அவர் நடித்து முடித்துள்ள 'கொம்பன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படமான 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு வரும் 23ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கார்த்தி இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர். விவேக் இந்த படத்தின் காமெடி கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடி என்றும், இதுவரை இல்லாத அளவில் கார்த்தியின் பெரிய பட்ஜெட் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில், 'காஷ்மோரா படம் பெரிய பட்ஜெட்டில்தான் தயாராகிறது என்றும் இந்த படத்தின் திரைக்கதை அமைப்பை ஸ்கிரீனில் கொண்டு வர அதிக பொருட்செலவு தவிர்க்க முடியாதது என்றும், இந்த படத்தின் விஷுவல் எபெக்ட்டிற்காக அதிக செலவு செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment