கவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு எம்.ஜி.ஆர். டைட்டில்?
கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் 'என்னை அறிந்தால்' படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்த கவுதம் மேனன், அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பெரும் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதே உற்சாகத்துடன் அடுத்ததாக சிம்பு படத்தை இயக்க அவர் தயாராகிவிட்டார்.
பிப்ரவரி 21ஆம் தேதி தனது புதிய படத்தின் படப்பிடிப்பை கவுதம் மேனன் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவுதம் மேனன் 'சட்டென்று மாறுது வானிலை' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தாலும், இது அதிகாரபூர்வமான தலைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் 'அச்சமென்பது மடமையடா' என்ற டைட்டிலை இந்த படத்திற்கு வைக்க ஆலோசனை செய்து வருவதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் உறுதியானால் முதல்முறையாக கவுதம் மேனன், எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் வரிகளை தனது டைட்டிலுக்கு பயன்படுத்துவதும் உறுதியாகும்
சிம்பு, பல்லவி சுபாஷ், சதீஷ் கிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு 'என்னை அறிந்தால்' படத்திற்கு பிரமாண்டமாக ஒளிப்பதிவு செய்த டான் மெக்ரதர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

0 comments:
Post a Comment