Tuesday, February 10, 2015

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்த திரைப்படம், ராஜண்ணா என்ற ரூ.100 கோடி வசூல் கொடுத்த தனுஷின் இரண்டாவது படம், உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் அறிமுகமாகியுள்ள படம், இசைஞானி இளையராஜா இசையமைத்த 1000வது படம், தொடர் வெற்றி படங்களை இயக்கிய பால்கியின் அடுத்த படம் என பல பெருமைகளை பெற்று கடந்த வெள்ளியன்று ரிலீஸான திரைப்படம் 'ஷமிதாப்'. இத்தனை பெருமைகளை பெற்றிருந்த போதிலும் இந்த படத்திற்கு எதிர்பார்த்த ஓபனிங் கிடைக்கவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 6ஆம் தேதி வெளியான 'ஷமிதாப்' முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.3.25 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளில் காலை மற்றும் மதிய காட்சிகளில் தியேட்டர்களில் கூட்டம் இல்லை என்றும், மாலை, மற்றும் இரவு காட்சிகளில் நல்ல கூட்டம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு நல்ல பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளபோதிலும் நல்ல ஓபனிங் இல்லாதது படக்குழுவினர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஷமிதாப் படம் பிரமாதமாக உள்ளதாக அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஹேமாமாலினி, சஞ்சய்கும்ப்தா, மற்றும் பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment