Tuesday, February 10, 2015


கடந்த 5ஆம் தேதி ரிலீஸான 'என்னை அறிந்தால்' படத்தின் வெற்றிக்கு ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒரு முக்கிய காரணமாக விமர்சகர்களால் கூறப்பட்டது. இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் 'என்னை அறிந்தால்' வெற்றிக்காக தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியை அவர் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்து கொண்டிருக்கின்றார். அனைத்து பெருமைகளும் இறைவன் கொடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஹாரீஸ் ஜெயராஜின் இசை வெற்றி தொடர்கதையாக ஆகும் வகையில் அடுத்தடுத்து அவர் இசையமைத்த படங்கள் ரிலீஸாகவுள்ளது. வரும் வெள்ளியன்று தனுஷ் நடிப்பில் கே.வி.,ஆனந்த் இயக்கத்தில் உருவான 'அனேகன்' திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்திற்காக ஹாரீஸ் அமைத்த பின்னணி இசை குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.

மேலும் இன்னும் சில நாட்களில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்த உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நண்பேண்டா' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் நடக்கவுள்ளது. ஏற்கனவே 'என்னை அறிந்தால்' படம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அனெகன், நண்பேண்டா ஆகிய படங்களும் வெற்றி பெறும் பட்சத்தில் அவர் இவ்வருடம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment