
சூர்யா, ஜோதிகா நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'சில்லுன்னு ஒரு காதல்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் திருப்தியாக இல்லாவிடினும், அந்த படத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. சரியான ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யாவின் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'மனம்' இயக்குனர் விக்ரம் குமாரின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்திற்குத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து விக்ரம் குமார் கூறியபோது தன்னுடைய திரைக்கதையை மூன்று மணி நேரம் படித்து பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான், தன்னை பாராட்டியதோடு, இசையமைக்கவும் உடனே ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.
இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் தயாராகிவிட்டதாகவும், அந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும், நடிகைகள் தேர்வு நடந்து வருவதாகவும் கூறிய விக்ரம் குமார், இருவருமே தென்னிந்திய நடிகைகளாக இருப்பார்கள் என்றும், பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றும் கூறினார். சூர்யா தற்போது 'மாஸ்' படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment