Thursday, February 12, 2015


தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற மனக்குறையை தவிர, மற்றபடி மனநிறைவாகவே இருக்கிறார் பாவனா. கடந்த 2013ல் 
பாவனா நடித்த 'ஹனி பீ' படம் மூணேகால் கோடியில் உருவாகி, 12 கோடியைத்தாண்டி வசூலித்து, போன வருடம் வெளியான 'ஆங்ரி பேபீஸ் இன் லவ்' படம் வெற்றிகரமாக ஐம்பது நாட்களை தொட்டது என மலையாளத்தில் பாவனாவின் ராசிக்கு ஒன்றும் குறைவில்லை. 

தற்போது மலையாளத்தில் இவர் நடித்துவரும் படங்களில் ஒன்றுதான் கிருஷ்ணா பூஜப்புரா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வப்னத்தேக்கால் சுந்தரம்' (கனவை விட அழகானது) படம். பிசினஸ்மேன் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நகரத்தில் அடியெடுத்துவைக்கும் கிராமத்துப்பெண் ஒருத்தி, ஆரம்ப காலகட்டத்தில் திருமண பந்தத்தில் சந்திக்கும் பிரச்சனைகளும், பின்னர் ஒரு குடும்பத்தலைவியாக மாறி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதும் தான் மையக்கதை.. 

இந்தப்படத்தில் கிராமத்துப்பெண்ணாக நடித்திருக்கிறார் பாவனா.. அதுமட்டுமல்ல ஒன்பது வயது பையனுக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். ஹீரோ வேறு யாருமல்ல, அவருடன் ஏற்கனவே 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் இணைந்து நடித்த நம்ம ஸ்ரீகாந்த் தான்.. இது மலையாளத்தில் இவர் நடிக்கும் நான்காவது படம். தற்போது பிருத்விராஜுடன் பாவனா நடித்துவரும் 'இவிடே' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்தப்படம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

0 comments:

Post a Comment