சூப்பர் சிங்கர் மோசடி - தனுஷ் மற்றும் விஜய்டிவிக்கு ஐரோப்பாவில் தடை?
விஜய்டிவி நிர்வாகம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மோசடி செய்துவிட்டதாக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தமிழர்கள் வழக்குபதிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
விஜய்டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் மக்கள் யாருக்கு அதிகம் வாக்களிக்கின்றனரோ அந்த போட்டியாளரே வெற்றி பெறுவார்கள் எனக்கூறி மக்களிடம் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தமக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு, தமது வாக்குகளை அள்ளி அள்ளி போட்டனர். இந்த வாக்கெடுப்பால் இறுதிச்சுற்றில் மட்டுமே எஸ்.எம்.எஸ். மூலம் 20 கோடியை ரூபாயை விஜய் டிவி சம்பாதித்தது.
மக்கள் அளித்த வாக்குகளின் எண்ணிக்கை கோடிகளைத்தாண்டிய வண்ணம் இருப்பதாக தெரிவித்தவர்கள், அந்த வாக்கு எண்ணிக்கை எவ்வளவு, யார் அதிக வாக்குகள் பெற்றார்கள் என இறுதிவரை அறிவிக்கவே இல்லை. இதனால் விழுந்து விழுந்து வாக்களித்த தமிழர்கள் அனைவரும் கொதித்துப்போய்விட்டனர்.
விஜய்டிவி திட்டமிட்டே இதை செய்துள்ளதாகவும், விஜய்டிவி உண்மையான வெற்றியாளருக்கு பதிலாக வேறு ஒருவரை அறிவித்துவிட்டதாகவும், பார்வையாளர்கள் அதிகமானோர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜய்டிவி மக்களை அவமதித்ததாகவும், நிகழ்ச்சி நடைமுறை வழக்க விதியை மீறியதாகவும், நிகழ்ச்சியில் குளறுபடி செய்ததாகவும் மூன்று பிரதான குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து ஐரோப்பா தமிழர்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்கள், விருந்தினர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குனர் மற்றும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் குற்றவாளியாக அறிவிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஏன் அந்த மக்கள் வாக்கெடுப்பு முடிவை தெரிவிக்க மறுத்தனர் என்ற முதன்மையான குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த வழக்கு மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த வழக்கில் அவர்கள் வெற்றிபெற்றால் நிகழ்ச்சியில் பங்குகொண்ட நடுவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் விருந்தினரான தனுஷ், அனிரூத், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஐரோப்பாவுக்கு பயணம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கபடலாம். அதேபோல் விஜய்டிவியின் ஒளிபரப்பும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

aama idhukum iropavukum enna sammantham
ReplyDelete