Monday, February 23, 2015

கமல்ஹாசனை கதாநாயகனாக்கிய மூத்த இயக்குனர் ஷக்தி மரணம் - Cineulagam
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான ஆர்.சி.ஷக்தி இன்று காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஒரு மாதமாக சென்னை வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் உடல் நிலை மிக மோசமானதால் பிற்பகல் நேரத்தில் உயிர் பிரிந்தது.
இவர் எடுத்த உணர்ச்சிகள் படத்தின் மூலம் தான் முதன் முதலில் கமல்ஹாசன் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் எடுத்த படங்களில் பல விருதுகளை குவித்த படம் பத்தினி பெண்.
கமல்ஹாசன் அவர்களுக்கு பிடித்தமான இயக்குனர் மட்டுமில்லாமல் இயக்குனர் ஷக்தி தன்னுடைய குரு என்று பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு தான்.

0 comments:

Post a Comment