Monday, February 9, 2015


கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை காஜல் அகர்வால் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– 

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்த்துவம் அளிக்கும் கதையாக இருக்க வேண்டும். அப்படியொரு வலுவான கதைக்காக காத்து இருக்கிறேன். முழுக்க முழுக்க அதுமாதிரியான படங்களில் தான் நடிப்பேன் என்று கூறமாட்டேன். 

அனுஷ்கா நடித்த ‘அருந்ததி’ படம் பெருமை அளிப்பதாக இருந்தது. கதாநாயகியை மையமாக வைத்து வந்த அப்படம் வெற்றிகரமாக ஒடியது. அதுமாதிரி படங்களில் நடிக்க ஆசை. இதுபோன்ற படங்களை பார்ப்பதற்கு மக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். பைனான்சியர்களும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். கதைதான் முக்கியம். கதாநாயகன், கதாநாயகியெல்லாம் இரண்டாவது தான். 

0 comments:

Post a Comment