திருமணத்திற்கு பிறகும் குஷ்பு அவ்னி சினி மேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் பல படங்களை தயாரித்து வருவது நமக்கு தெரியும்.
தற்போது இந்த ஆண்டு மூன்று புதிய படங்களை தயாரிக்க போவதாக குஷ்பு கூறியுள்ளார். இப்போது முதன்முதலாக தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவதாக குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில் இந்த வருடத்தில் எனது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பில் 3 படங்களை தயாரிக்க உள்ளேன். இதில் ஒரு படத்தை எனது கணவர் சுந்தர்.சி இயக்கவுள்ளார். மற்ற இரண்டு படங்களிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment