அஜீத்தை முந்தி நம்பர் 1 பிடித்த ரஜினிகிருஷ்ணன்
தல அஜீத் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச்சிறந்த மோட்டார் சைக்கிள் ரேஸர் என்பது அனைவரும் அறிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜீத் சர்வதேச மோட்டார் சைக்கிள் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு 27வது இடத்தை பிடித்தார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதே போட்டியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் நமது சென்னையை சேர்ந்த ரஜினிகிருஷ்ணன் என்பது பலருக்கு தெரிந்திருக்காது.
அந்த போட்டியில் தன்னுடன் கலந்து கொண்ட அஜீத் குறித்து சமீபத்தில் கருத்து கூறியுள்ள ரஜினிகிருஷ்ணன், 'அஜீத் ரொம்ப நல்ல மனிதர். அவரை பற்றி வேற என்ன சொல்லணும்' என்று சிம்பிளாக முடித்து கொண்டார்.
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த உலக சாம்பியன் ரஜினிகிருஷ்ணன் கடந்த 2009ஆம் ஆண்டு ஏஷியன் ரோடு சாம்பியன் பட்டமும், 2013ஆம் ஆண்டு கத்தார் சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மேலும் பதக்கங்கள் பெற்றுள்ள இவரது வாழ்க்கையில் நடந்த ரேஸ் சம்பவங்களை வைத்து ஒரு இயக்குனர் சினிமா எடுக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment