Saturday, May 30, 2015

sivakarthikeyan anjali
சித்தியுடன் சண்டை போட்டு சில மாதங்கள் ஆந்திரா பக்கம் ஒதுங்கியிருந்தார் அஞ்சலி. பிரச்னையெல்லாம் முடிந்து விட்டதால் தற்போது மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். அஞ்சலி தற்போது ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர், விமலுடன் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து குறுகிய காலத்தில் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கும், அஞ்சலிக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இருவரும் நெருக்கமாக செல்ஃபி எடுத்துக் கொண்ட படமும் இணைய தளங்களில் பரவி உள்ளது. இந்த செல்பி ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆழமான கிசுகிசுவை கிளப்பியுள்ளது.
ஆனால் அஞ்சலியின் மேனஜர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஞ்சலியின் மேனஜர் கூறியதாவது, சிவகார்த்திகேயனையும், அஞ்சலியையும் இணைத்து வெளியான செய்தியில் உண்மை இல்லை. அஞ்சலி, சிவகார்த்திகேயனை சமீபத்தில் சந்திக்கவே இல்லை. கடந்த வருடம் சிங்கப்பூரில் நடிகர்– நடிகைகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் பங்கேற்றார்கள் என்று கூறினார். சிவகார்த்திகேயனிடம் இதுகுறித்து கேட்ட தொடர்பு கொண்ட போது, அவர் போனை ஏற்கவில்லை.

0 comments:

Post a Comment