
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யாவின் இரட்டை நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ். இந்த படம் இன்றுதான் இந்தியா முழுவதும் ரிலீஸாகியுள்ளது.
ஆனால் படம் ரிலீஸாவதற்கு முன்பே மாஸ் படம் முழுவதும் இணைய தளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இப்படம் நேற்றே திரையிடப்பட்டது. அப்போது அதை வீடியோ எடுத்து இணையத்தில் உலாவிட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகியுள்ள படக்குழுவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அந்த வலைபக்கத்தை முடக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது படக்குழு.
0 comments:
Post a Comment