Saturday, May 30, 2015

விஜய் சேதுபதி நடிப்பில் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘சூது கவ்வும்’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து சஞ்சிதா ஷெட்டி ‘பீட்சா 2’வான ‘வில்லா’ படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தற்பொழுது அருண் கிருஷ்ணசாமி இயக்கும் ‘என்னோடு விளையாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எலிகளுக்கு இடையில் நடனம் - சஞ்சிதா ஷெட்டி
இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி நடனமாடும் பாடல் ஒன்று தற்பொழுது பதிவு செய்யப்பட்டது. அந்த பாடல் காட்சியானது மிகவும் பாழடைந்த பங்களாவில் எலிகள் ஓடும் இடத்தின் நடுவில் நடனம் ஆடுவதாக அமைந்துள்ளது. எலிகள் என்றாலே அனைத்துப் பெண்களுக்கும் பயம் ஏற்படும். அதைப்போல் பயந்த சஞ்சிதா ஷெட்டி அந்த பாடலுக்கு நடனமாட மறுத்துள்ளார். பின்பு படக்குழுவினர் அவரிடம் பலவாறு கேட்க தனக்கு இருந்த பயத்தைப் போக்கிக் கொண்டு அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

0 comments:

Post a Comment