Friday, May 29, 2015


இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு சினிமா பிரியர்களுக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும், சிலருக்கு ஆக்‌ஷன் காட்சிகளும், இன்னும் சிலருக்கு காதல் காட்சிகளும் பிடிக்கும், ஆனால் இன்றுவரை இந்த இரண்டுக்குமே பெயர் போன இடம் ஹாலிவுட் மட்டுமே.

இன்றளவும் உலகின் சந்து பொந்துகளிலும் ஹாலிவுட் படங்கள் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. சரி இப்ப நம்ம இந்திய சினிமாவுக்கு வருவோம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னே இந்திய சினிமாவில் சண்டைக்காட்சி என்பது நம்ப முடியாதளவுக்கு அந்தரத்தில் பறந்தும், 15வது மாடியிலிருந்து குதித்து ஒரு ஹிரோ சண்டைப்போடும் காட்சிகள் போன்றவைகளாக வைத்து ரசிகர்களை நம்ப வைத்துக் கொண்டிருந்தார்கள், அந்தந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குநர்கள். இந்த மாதிரியான காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனும் இது இவனுக்கே ஓவரா இல்ல என்ற பேசுமளவுக்குத்தான் இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும் என்று பலர் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுகுறித்து தற்போது முதல் முறையாக ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் பேட்டியளித்துள்ளார், ஆமாங்க இந்திய சினிமாவுல சண்டைக்காட்சிகள் ரசிகர்களை ஏமாற்றும் விதமாகத்தான் இன்றளவும் இருக்கிறது, ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

எங்கள மாதிரி ஸ்டண்ட் ஆட்கள் ஒரு படத்தில ஒரு ஆக்‌ஷன் சீன் எடுக்கனும்னா அந்த கதையை மீறாத ஒரு சண்டைக்காட்சியாகத்தான் எடுக்க வேண்டியிருக்கு, ஹாலிவுட்ல வர்ற மாதிரி எங்களால் சண்டைக்காட்சிகள் எடுக்க முடியும் அந்தளவுக்கு திறமையும் எங்களிடமிருக்கு, அதைத்தான் தற்போது இளையதளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “புலி” படத்துல நாங்க எகிறி அடிச்சிருக்கோம்.

புலி படத்துல சண்டைக்காட்சிக்கு மட்டும் 84 நாட்கள் நாங்க செலவழிச்சிருக்கோம், இந்த படத்துல வர்ற சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் அதை நீங்க தியேட்டர்ல பார்த்தா உங்களுக்கு தெரியும். இவ்வாறு சூப்பர் சுப்புராயன் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் சூப்பர் சுப்புராயன் முதல் முறையாக ஒரு படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். விமல், நந்திதா, இயக்குநர் தங்கம் சரவணன், பசுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் “அஞ்சல” படத்தைத்தான் தற்போது இவர் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment