என்னை அறிந்தால் படத்தையடுத்து அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அண்ணன்-தங்கை பாசத்தை முன் வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். மே 7ம் தேதி சென்னையில் துவங்கப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜுன் முதல் வாரம் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.
இதுவரை அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத ஸ்ருதி ஹாசன் அடுத்த வாரம் கலந்து கொள்ளவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜுன் 2ம் வாரத்தில் லட்சுமி மேனன் மீண்டும் தல 56வது படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என லட்சுமியின் நெருங்கிய வட்டாரங்களில் தெரிவிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
0 comments:
Post a Comment