மும்பை காவல் நிலையத்தில் சன்னிலியோன் ஆஜர்
பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் மீது சமீபத்தில் மும்பை தானா காவல்நிலையத்தில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்களில் ஆபாசமாக நடிப்பதாகவும், இந்திய கலாச்சாரத்திர்கு எதிராக அவரது படங்கள் இருப்பதாகவும், மேலும் பத்திரிகைகளில் வெளிவரும் அவரது கவர்ச்சியான புகைப்படங்களால் இந்திய கலாச்சாரம் சீரழிகிறது என்றும் இந்து ஜனஜக்ரிதி சமிதி அமைப்பை சேர்ந்த ஒரு தொண்டர் அளித்த புகாரின் அடிப்படையில் சன்னிலியோன் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த நடிகை சன்னிலியோன், இதுகுறித்து விளக்கம் அளிக்க நேற்று தனது வழக்கறிஞருடன் ’தானே’ சைபர்செல் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். அந்த காவல் நிலையத்தில் சன்னிலியோன் சுமார் ஒரு மணி நேரம் இருந்ததாகவும், சன்னிலியோன் காவல்நிலையத்திற்கு வந்த தகவலை தெரிந்து கொண்ட அந்த பகுதி ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கில் கூடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
34 வயதான சன்னிலியோன் கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட்டில் 'ஜிஸம் 2' என்ற படத்தின் மூலம் இந்திய திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர் ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ், ஹேட் ஸ்டோரி, போன்ற பல படங்களில் நடித்த சன்னிலியோன், கடந்த 8ஆம் தேதி "குச் குச் லோட்சா ஹை' என்ற படத்தை ரிலீஸ் செய்தார்.
0 comments:
Post a Comment