அஜித்-வெங்கட் பிரபு கூட்டணியில் தலயின் 50வது படமாக வெளியாகிய மங்காத்தா படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது.
தெளிவாக கூற வேண்டும் என்றால் அந்த படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் 5 படங்கள் வெளியாகி விட்டது. ஆனால் மங்காத்தா படத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த ஐந்து படத்திற்கும் கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் படம் வெளியாகியுள்ளது.
மாஸ் படத்தையடுத்து வெங்கட் பிரபுவின் அடுத்த ப்ளான் என்னவென்று கேட்டால், அஜித்துக்காக பல ஒன்லைன் ஸ்கிரிப்பட்கள் தயார் செய்து வைத்துள்ளேன். தல ஓகே சொல்லிவிட்டால் எங்களது கூட்டணியில் தல57-வது படம் தயாராகும். ஆனால் அஜித்தை சந்திக்கும் நேரம் இன்னும் அமையவில்லை. ஒரு வேளை இருவரும் இணைந்தால் அது மங்காத்தா-2வாக கூட இருக்கலாம்.
0 comments:
Post a Comment