ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் பாஹுபலி. கடந்த 2 வருடமாக இதன் படப்பிடிப்பு நடந்துவந்தது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இம்மாதம் 31ம் தேதி நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை பட குழு வேகமாக செய்தது. ஆனால் திடீரென்று இந்த விழா தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் ஹீரோ பிரபாஸுக்கு பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. அதேபோல் அனுஷ்கா, தமன்னா போன்ற நட்சத்திரங்களின் ரசிகர்களும் ஆடியோ விழாவில் பங்கேற்க அனுமதி கேட்டிருந்தனர்.
சரியான பாதுகாப்பு இல்லாமல் விழா நடத்தினால் அசம்பாவிதம் நடக்கக்கூடும் என்று தெரிவித்த போலீசார் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்வதற்கு அவகாசம் தேவை எனவும் தெரிவித்தனர். இதையடுத்தே ஆடியோ ரிலீஸ் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களை குறிப்பிட்ட அளவில்தான் அனுமதிக்க வேண்டும், போலீஸார் கூறும் விதிகளுக்கு ஏற்ப பட குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஒத்துழைப்பு தரவேண்டும் என ராஜமவுலியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆடியோ ரிலீஸுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களிடம் தற்போது ராஜமவுலி, பிரபாஸ் மன்னிப்பு கேட்டுள்ளனர். விரைவில் விழா நடத்துவதற்கான புதிய தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று இருவரும் கூறி உள்ளனர்.
0 comments:
Post a Comment