சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கை துவங்கினார் ஆர்யா. சில மணி நேரம் ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடினார். அப்போது ரசிகர்கள் விஜய் பற்றி கேட்டுள்ளனர்.
அதற்கு ஆர்யா, விஜய் ஒரு கூலானா சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் மிகவும் பணிவானவர், ரொம்ப உற்சாகமானவர் என்றும் கூறியிருக்கிறார்.
ஆர்யா தற்போது ‘யாட்சன்’, ‘வாசுவும் சரவணனும் ஒன்னாப்படுச்சவங்க’, ‘இஞ்சி இடுப்பழகி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment