Saturday, May 30, 2015

பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி படம் ஜூலை17 இல் வெளியாகும் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்தப்படத்தின் வியாபாரம் இன்னும் முழுமையடையவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேஜிக்பிரேம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தின் வேலைகளை முடித்து தயாரிப்பு நிறுவனத்திடம் தனுஷ் தரப்பில் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பின் வியாபாரம் பேசப்போகும்போதுதான் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது என்று சொல்கிறார்கள். 

அதற்குக் காரணம், படத்துக்கு மிகஅதிக அளவில் விலை சொல்லுகிறார்களாம். இந்தப்படத்துக்கு சுமார் பதினெட்டுகோடியளவில் செலவு செய்ததாகச் சொல்லப்படுகிறது. படத்தை விற்பதற்காக அவர்கள் சொல்லும் விலையை மொத்தமாகக் கூட்டிப்பார்த்தால்  சுமார் முப்பத்தைந்துவரை வருகிறதாம். அவ்வளவு விலை கொடுத்து வாங்கினால் சிக்கலாகிவிடுமோ என்று பலரும் பயப்படுவதால்தான் இந்தப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையாமல் இருக்கிறதென்று சொல்கிறார்கள்.

எப்படியும் வியாபாரம் நடந்துவிடும் என்கிற நம்பிக்கையும் அப்படியே நடக்காவிட்டாலும் சொந்தமாகப் படத்தை வெளியிடும் அளவில் வாய்ப்புள்ள தயாரிப்பாளரிடம் படம் இருப்பதால் படக்குழுவினர் தெம்பாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் இன்னும் கொடுக்கப்படவில்லை என்றும் அதற்கும் விலை அதிகமாகச் சொல்வதால் எந்தத் தொலைக்காட்சியும் வாங்கவில்லை என்றும் சொல்கிறார்கள். படத்தை வெளியிட இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் நேரமிருப்பதால் அதற்குள் எல்லாமே சிறப்பாக நடந்துமுடிந்துவிடும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

0 comments:

Post a Comment