த்ரிஷாவிற்கும், வருண் மணியனிற்கும் இந்தாண்டு இறுதியில் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் இவர்களின் கல்யாணம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென நின்று விட்டது.
திருமணம் நின்றதற்கு என்ன காரணம் என்று கூறாததால் ஊடகங்கள் தன் இஷ்டத்திற்கு புது புது காரணங்களை கூறி வந்தது. இந்நிலையில் திருமணம் குறித்து த்ரிஷா கூறியதாவது, திருமணம் நின்று போனது உண்மை தான். இது எதிர்பாராமல் நடந்த ஒன்று. சில விஷயங்கள் நம்மையும் மீறி நடந்து விடுகின்றன. அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
திருமணம் நின்றது பற்றி நான் கவலைப்படவில்லை. அது பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கவும் விரும்பவில்லை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். தற்போது எனது முழு சிந்தனையும் சினிமாவில்தான் இருக்கிறது. நான் கடவுளின் குழந்தை. கடவுள் என்னை கவனித்துக் கொள்வார் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment