Sunday, May 31, 2015


கமல் ஹாசன் படம் படம் என்றாலே கண்டிப்பாக ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். அதே போல் பல பிரச்சனைகளைக் கடந்து வெளியான உத்தம வில்லன் படம் ஓரளவிற்கே வெற்றி பெற்றது.

இதையடுத்து கமல் நடித்து வரும் படம் பாபநாசம். இத்துடன் தூங்காவனம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ முதலில் தமிழ்நாட்டில் வெளியிடாமல் ஆந்திராவில் வெளியிட்டிருக்கிறார்.

அங்கு அந்த படத்தின் பெயர் சீக்கட்டி ராஜ்யம் அதற்கப்புறம் தான் தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இங்கு வெளியிடப்பட்டதற்கும் அங்கு வெளியிடப்பட்டதற்கும் சில மணி நேரங்கள் தான் வித்தியாசம் என்றாலும், கமலின் இந்த திடீர் தெலுங்கு பற்று பலரையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது.

சாவுங்கடா.... அவருடைய உத்தம வில்லனை ஓட விடாமல் கமல் சாரை கவலை கொள்ள வச்சீங்கள்ல? அவரு இப்படிதான் பண்ணுவாரு என்று அவரது அதிதீவிர ரசிகர்கள் வேண்டுமானால் சண்டைக்கு வரலாம். ஆனால் கமல் செய்தது சண்டை போட வேண்டிய விஷயம் என்று ஒரு சில மீடியாக்கள் கமல்ஹாசன் மீது காட்டம் காட்டியுள்ளனர்.

0 comments:

Post a Comment