அஜீத்தின் 'தல 56' படத்தில் இணையும் 'ஜீரோ' நாயகன்
சிறுத்தை சிவா இயக்கத்தில் 'தல அஜீத் நடித்து வரும் இன்னும் பெயர் வைக்கப்படாத திரைப்படமான 'தல 56' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து இன்னும் சில நாட்களில் கொல்கத்தாவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இன்னும் ஒரு நடிகர் இணைந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
ஏற்கனவே அஜீத் நடித்த 'மங்காத்தா' படத்தில் கணேஷ் என்ற கேரக்டரில் நடித்த அஷ்வின், தல 56' படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. அஜீத் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக கூறப்படும் அஷ்வின், என்னை அறிந்தால்' படத்தின் படப்பிடிப்பின்போதே அஜீத்தை அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் அஷ்வின் நடித்த மேஹா' என்ற படம் ரிலீசாகி சுமாராக ஓடிய நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள 'ஜீரோ' என்ற படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றார்.
0 comments:
Post a Comment