துருவ நட்சத்திர வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கவுதம் மேனன்
காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களுக்கு பின்னர் மீண்டும் சூர்யா-கவுதம் மேனன் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் இணையவிருப்பதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் செய்தி வெளிவந்தது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஒருசில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் 'துருவ நட்சத்திரம்' உருவாக இருப்பதாகவும், அந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் விக்ரம் நடிக்கவிருப்பதாக செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
மேலும் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் அருண்விஜய் மீண்டும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த செய்திகள் அனைத்தையும் கவுதம் மேனன் தற்போது மறுத்துள்ளார். தற்போது தன்னுடைய கவனம் முழுவதும் சிம்பு நடித்து வரும் "அச்சம் என்பது மடமையடா' படத்தில் மட்டுமே உள்ளதாகவும், இந்த படத்தை முடித்த பின்னர்தான் அடுத்த படம் குறித்து முடிவு செய்ய உள்ளதாகவும் கூறி, பரவி வரும் துருவ நட்சத்திர வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார் கவுதம் மேனன். மேலும் அருண்விஜய்யும் இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு, மஞ்சிமா மோகன், சதீஷ் கிருஷ்ணன், ராணா டகுபாய், மற்றும் பலர் நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். டான் மெக்ரதூர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது.
0 comments:
Post a Comment