Saturday, May 30, 2015

வியாபாரம் ஆகாத தனுஷ் படம் - Cineulagam
வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து கலக்கியவர் தனுஷ். இதை தொடர்ந்து இவர் நடித்த அனேகன், ஒரு சிலர் ஹிட் என்றாலும் பலரும் நஷ்டம் என்றே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இவர் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய மாரி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. ஆனால், இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 18 கோடிகளுக்கு மேல் ஆனதால், படக்குழுவினர்கள் ரூ 30 கோடி வரை வியாபாரத்தை எதிர்ப்பார்க்கின்றனர்.
இதனால், இப்படத்தை வாங்க பலரும் தயங்கி வருகிறார்களாம். தொலைக்காட்சி உரிமம் கூட இன்னும் விற்கவில்லை என கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment