சமீபத்தில் குட்டித்தல' பிறந்ததால் மீண்டும் ஒருமுறை தல அஜீத் அப்பாவானார் என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் விஜய்யும் தற்போது அப்பாவாகியுள்ளார். ஆனால் ரியலில் அல்ல.. ரீலில். ஆம் அட்லி இயக்கத்தில் அடுத்து அவர் நடிக்கவுள்ள படத்தில் விஜய் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அஜீத் ஏற்கனவே வரலாறு, அசல், மற்றும் சமீபத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' ஆகிய படங்களில் அப்பாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 59' படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கவுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் இருவரில் யார் அம்மாவாக நடிக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இந்த படத்தில் விஜய் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தியும் உண்மைதான் என்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாகவும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக அட்லி தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் சீனா சென்றிருந்த அட்லி, அங்கு பல அற்புதமான லொகேஷன்களை பார்த்து வந்துள்ளதாகவும், அந்த லொகேஷன்களில் மிக விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment