தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராதான் முதலில் உள்ளார். இவருக்கு வரும் பட வாய்ப்பையெல்லாம் ஏற்று கொள்வது இல்லையாம்.
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை மொத்த கதையையும் கேட்பவர், வெறும் கிளுகிளு காட்சிகளில் நடிப்பதை விட படம் பார்ப்பவர்களை மனதை தொடுவது போன்று ரசிகர்களை கண்கலங்க வைக்கும்படியான காட்சிகளே இல்லையே என்று சுட்டிக் காட்டுகிறாராம். இதனால் இயக்குனர்களும் நயன்தாராவிற்காக சில செண்டிமென்ட் காட்சிகளையும் இணைக்கிறார்களாம்.
அதோடு அது போன்ற செண்டிமென்டான சீன் வரும் போது கிளிசரின் தேவையில்லை என்று கூறிவிடுகிறாராம் நயன்தார. ஷாட் முன் நின்றதும் நயன்தாராவின் கண்களில் இருந்து கண்ணீர் மழை அருவி போல் நிற்காமல் வருகிறதாம். கிளிசரின் இல்லாமல் கண்ணீர் விடும் நயன்தாராவை படக்குழுவே ஆச்சர்யத்தோடு பார்க்கிறதாம்.
0 comments:
Post a Comment