
8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியான படம் 36 வயதினிலே. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
36 வயதினிலே படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சூர்யா, 36 வயதினிலே படத்தை இவ்வளவு தூரம் கொண்டு போன எல்லோருக்கும் நன்றி. இந்த படத்திற்காக ஜோதிகா ப்ளஸ் 2 படிக்கும் பெண் போன்று டயலாக்குகளை இரவு முழுக்க படிப்பார். சில சமயங்களில் நானும் டயலாக்குகளை சொல்லி கொடுப்பேன்.
இந்த படத்தில் வரும் எந்த டயலாக்கை கேட்டாலும் அவர் அப்படியே மனப்பாடமாக சொல்வார். படத்தை பார்த்து விட்டு என் அப்பா, தவறாக எடுத்து கொள்ளாதே… உன்னை விட ஜோதிகா மிகவும் அருமையாக நடிக்கிறார், ஹேட்ஸ் ஆப் ஜோ…” என்று சொன்னார். நானும் உண்மை தான் என்று சொன்னேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment