Sunday, May 31, 2015

vijayகோலிவுட்டில் தற்போது பேய்களின் ராஜ்ஜியம் தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் அருள்நிதி நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான டிமான்ட்டி காலனி படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

பேய் படங்கள் என்றால் விஜய் மிகவும் விரும்பி பார்ப்பார். இதனால் இவருக்காக பிரத்தேயக காட்சி ஒளிபரப்பபட்டது. படத்தை பார்த்த விஜய் இப்படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். ‘ஒரு விஷயம் லேட் ஆகுதுன்னு வருத்தப்படாதீங்க, அது எவ்வளவு Strongகாக வெளிவருகிறது என்பதே முக்கியம்’ என்று இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு, விஜய் அறிவுரையும் வழங்கினாராம்.
விஜய்யின் பாராட்டு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. துப்பாக்கி படத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்பது குறிப்பிடதக்கது. விஜய் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’ படத்தையும், லாரன்ஸின் ‘காஞ்சனா 2’ படத்தையும் பாராட்டியிருக்கிறார்.

Read more at http://www.tamilcinemafire.com/demonte-colony-movie-vijay-saw-praise/#mpg46cCEL40E9vQA.99

0 comments:

Post a Comment