Saturday, May 30, 2015

தமிழ் சினிமாவின் ரியல் மாஸ் - Cineulagam
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் விரும்புவது மாஸ் காட்சிகளை தான். ஏனெனில் வேலை பளு, வீட்டில் கஷ்டம் என அனைத்தையும் மறந்து திரையரங்கில் தன் ஆதர்ஸ நாயகன் காட்டும் மாஸை விசில் அடித்து பார்த்து சந்தோஷப்படுவார்கள். அப்படி நம்மை திரையில் அசத்திய நாயகர்களின் மாஸ் காட்சிகள் இதோ..
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் என்றாலே மாஸ் தான், தன் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒருவிதமாக ரசிகர்களை கவரும் மாஸ் காட்சி வைப்பதில் ரஜினி கில்லாடி. அதிலும் பாட்ஷா, படையப்பா படங்களில் சொல்லவே வேண்டாம். இதில் குறிப்பாக படையப்பா படத்தில் ஊஞ்சலை துண்டில் கட்டி இழுக்கும் போது திரையரங்கமே அதிர்ந்தது.
கமல்ஹாசன்
கமல் எப்போதும் Class வகை நடிப்பை தான் விரும்புவார், இருந்தாலும் தன்னால் முடிந்த அளவிற்கு சிறு சிறு இடங்களில் வேட்டையாடு விளையாடு படத்தில் கண்ணை காட்டி எடுடா..என்று கூறும் போதும் சரி, விஸ்வரூபம் படத்தில் சாதுவாக இருந்து அத்தனை பேரையும் ஒரு நொடியில் அடித்து முடிக்கும் காட்சி எவரும் எட்ட முடியாத மாஸ் காட்சிகள்.
அஜித்
அஜித் படங்கள் என்றாலே மாஸ் காட்சிகளுக்கும் ஒரு போதும் பஞ்சம் இருக்காது, அவர் நின்றால், நடந்தால் அனைத்திற்கும் திரையரங்கில் விசில் பறக்கும். ஆனால், இவரின் ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்திய மாஸ் படம் என்றால் அது மங்காத்தா மற்றும் வீரம் தான். அதிலும் மங்காத்தா படத்தில் வில்லன் என்பதால் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் கலக்கியிருப்பார். இதில் அசல் படத்தில் அஜித் வந்தாலே போதும் படம் ஹிட் ஆகிவிடும் என்று படம் முழுவதும் மாஸ் காட்சிகள் வைத்து கதையில் கோட்டை விட்டு படம் தோல்வியடைந்தது வேறு கதை.
விஜய்
ரஜினிக்கு பிறகு அவரை போலவே வேகமாக மாஸ் வசனங்கள் பேசுவதில் விஜய் தான் பெஸ்ட். தன் ஒவ்வொரு படத்திலும் அதிரிபுதிரியான மாஸ் காட்சிகள் இடம்பெற செய்து விடுவார். அதிலும் குறிப்பாக துப்பாக்கி படத்தில் தன் தங்கச்சியை கடத்திச் சென்ற கும்பலை பிடிக்க செல்லும் போது புகையிலிருந்து வெளிவரும் காட்சி திரையரங்கையே அதிர வைத்தது. ஆனால், இதில் எல்லை மீறி ஜில்லா படத்தில் எல்லாம் மாஸ் என்று விஜய் செய்வது அனைவரையும் சோதித்தது.
சூர்யா
மாஸ் டைட்டிலேயே நடித்த ஒரு ஹீரோ சூர்யா, ஆனால், அந்த தலைப்பையும் மாற்றி விட்டார்கள் என்பது கொடுமை தான். சூர்யாவிற்கு பெரிதாக மாஸ் காட்சிகள் Work Out ஆவது இல்லை, அவர் Class ஆக செய்யும் பல காட்சிகள் கமல்ஹாசனை போல் இவருக்கு க்ளிக் ஆகிவிடும். இதில் காக்க காக்க, சிங்கம் எப்போதும் Special தான்.
விக்ரம்
விக்ரம் எப்போதும் மாஸ் படங்களை விரும்ப மாட்டார். அவருக்கு யதார்த்தமாக அமைந்த சாமி நல்ல பெயரை வாங்கினாலும், மாஸாக நடிக்கிறேன் என்று அவர் ராஜப்பாட்டை படத்தின் மூலம் பலத்த அடி வாங்கினார்.

இதேபோல் இவர்களை பார்த்து தனுஷ், சிம்பு, ஜீவா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி என அனைத்து நடிகர்களும் மாஸ் காட்சிகளில் நடிக்க முயற்சி செய்து இதில் வெற்றியும், தோல்வியும் அடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment