புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணி மற்றும் கிராபிக்ஸ் பணிகளில் பிஸியாக இருக்கிறது படக்குழு. இந்த படத்தில் விஜய்யுடன் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், நந்திதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் புலி படம் பற்றியும், விஜய்யுடன் பணிபுரிந்தது பற்றியும் சுதீப் கூறியதாவது, விஜய்யுடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. விஜய் அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர்.
அதுமட்டுமின்றி விஜய் ஒரு பக்கா ஜென்டில்மேன். விஜய்யை யாராலும் டாமினேட் பண்ண முடியாது. ஆனால் இதில் என்னுடைய கதாப்பாத்திரத்திற்க்கும் இடம் கொடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். ‘புலி’ படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என்றும் விஜய்யிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment