Thursday, May 28, 2015

ajith
வீரம் படத்தையடுத்து அஜித்-சிவா மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். மே 7ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜுன் மாதம் முதல் வாரம் தொடங்கவிருக்கிறது. லட்சுமி மேனன் தங்கையாகவும், ஸ்ருதி ஹாசன் அஜித்திற்கு ஜோடியாகவும் நடிக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே, இவருடைய தயாரிப்பில் உருவான ‘ஆரம்பம்’ படம் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்து வெற்றி பெற்றது. அதன்பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியான என்னை அறிந்தால் படம் அந்த அளவிற்கு ஓடவில்லை.
எனவே மீண்டும் ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற ஆதங்கத்திலிருக்கும் அஜித் ஆரம்பம் செண்டிமென்ட் மீண்டும் ஒர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கையில் தல 56வது படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். தீபாவளிக்கு ரிலீஸாவதை தயாரிப்பு தரப்பும் கிட்டதட்ட உறுதி செய்து விட்டதாம்.

0 comments:

Post a Comment