சிம்பு-ஸ்ருதிஹாசனுடன் இணைந்தார் த்ரிஷா
பாலிவுட் மற்றும் கோலிவுட் செலிபிரட்டிகளை தற்போது புதியதாக அடிமைப்படுத்தியிருக்கும் ஒரு அப்ளிகேஷன் டப்ஸ்மாஷ் (Dubsmash) என்று கூறப்படுகிறது. இந்த ஆப்ஸ் மூலம் நமக்கு பிடித்த அல்லது நமது வீடியோக்களை பதிவு செய்து நமது நண்பர்களுக்கு அனுப்பலாம்
சமீபத்தில் கூட பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, ரஜினியின் பஞ்ச் வசனங்களை டப்ஸ்மாஷில் பதிவு செய்ததாகவும், அதை ஏ.ஆர்.முருகதாஸ் ரசித்ததாகவும் செய்தி வெளியாகியது. இந்நிலையில் தற்போது புதிதாக டப்ஸ்மாஷில் இணைந்திருப்பவர் த்ரிஷா.
ஏற்கனவே கோலிவுட் செலிபிரட்டிகளான சிம்பு, ஸ்ருதிஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இந்த டப்ஸ்மாஷில் இருந்தாலும், இன்னும் அதிகளவில் கோலிவுட்டில் இந்த ஆப்ஸ் பிரபலமாகவில்லை. தற்போது த்ரிஷா இதில் எண்ட்ரி ஆகியுள்ளதால் விரைவில் கோலிவுட் மட்டும் ரசிகர்களிடமும் இந்த ஆப்ஸ் பரவிவிடும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் டப்ஸ்மாஷில் அறிமுகமான த்ரிஷா, 'ப்ரெண்ட்ஸ்' என்ற தலைப்பில் ஒரு வீடியோவை அவரே பேசி பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment