
இளம் இசையமைப்பாளர்களில் புகழ் பெற்று விளங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ், தனது பிசியான இசையமைக்கும் பணிகள் இடையே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவர் நடித்து வெளியான முதல் படமான 'டார்லிங்' நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து விரைவில் அவர் நடித்த 'பென்சில்' வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் 'த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்\
ஜி.வி.பிரகாஷ், கயல்' ஆனந்தி சிம்ரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் தற்போது ப்ரியா ஆனந்த் அவர்களும் சிறப்பு தோற்றத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சிறப்பு தோற்றம் என்றால் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடும் காட்சியில் ப்ரியா ஆனந்த் நடிக்கவில்லை என்றும் படத்திற்கு திருப்புமுனையாக அமைந்துள்ள ஒரு கேரக்டரில் நடித்துள்ளதாகவும் இயக்குனர் ஆதிக் கூறியுள்ளார். சமீபத்தில் ப்ரியா ஆனந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஐதராபாத்தில் ஒன்றரை நாள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் ப்ரியா ஆனந்த் அஜீத் கொள்கையை கடைபிடித்ததாகவும் படக்குழுவினர் பெருமையாக கூறி வருகின்றனர். அஜீத் தனது படக்குழுவினர்களுக்கு பிரியாணி செய்து பரிமாறுவதை போல ப்ரியா ஆனந்தும் தனது படப்பிடிப்பு முடிந்தபோது படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணியும் ஐஸ்க்ரீமும் பரிமாறியதாக கூறியுள்ளனர்., |
0 comments:
Post a Comment