
வீரம் படத்துக்கு பிறகு மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது.
சமீபத்தில் அஜித்தின் தங்கையாக நடிக்கும் லக்ஷ்மி மேனன் காட்சிகள் பின்னி மில்லில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் கதை பாட்ஷா படம் ஒரு கங்கஸ்டார் கதை என்று சொல்லபடுகிறது.
இதுவரை அஜித்தின் கதாபாத்திரம் என்ன என்பது வெளியே கசியவில்லை. முதலில் அஜித் தான் இப்படத்தில் ஒரு டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவல் படி ஸ்ருதிஹசன் தான் படத்தில் கொல்கத்தாவில் வாழும் டாக்ஸி டிரைவராக நடிக்கிறாராம்.
இது வரை தன் சினிமா வாழ்கையில் ஏற்காத புதிய கதாபாத்திரம் என்பதால் தான் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டாராம்.
மேலும் படத்தில் காக்கி உடை அணிந்து கொண்டு வரும் காட்சிகள் கூட அதிகம் உண்டு என்று சொல்லபடுகிறது.
0 comments:
Post a Comment