
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனைவராலும் பேசப்பட்ட படம் ஜிகர்தண்டா. இப்படத்தை பைவ் ஸ்டார் எஸ். கதிரேசன் என்பவர் தயாரித்திருந்தார்.
இப்படத்திற்கான சம்பள அக்ரிமென்ட் போடும்போது இயக்குனருக்கு சம்பளம் போக, ஹிந்தி பதிப்பு உரிமையின் 40 சதவிகித பங்குகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டதாம்.
இப்போது ‘ஜிகர்தண்டா’படத்தின் ஹிந்தி உரிமையை என்னிடம் தெரிவிக்காமலேயே தயாரிப்பாளர் கதிரேசன் விற்க முயல்வதாக சில நாட்களுக்கு முன்பு கார்த்திக் சுப்பாராஜ் குற்றம் சாட்டியிருந்தார்.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக வழக்குத் தொடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். தற்போது அவருக்கு சாதகமாக நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘‘ஜிகர்தண்டா படத்தின் மொழிமாற்று உரிமையை விற்க ஜூன் 15, 2015 வரை தடை விதித்துள்ளது.
அதோடு எஸ்.கதிரேசன் தரப்பு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் செய்தி ஒன்று வெளியிட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment