Saturday, May 30, 2015


விக்ரமை வைத்து கவுதம் மேனன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் கைவிடப்பட்டது. என்னை அறிந்தால் படம் வெளியானதும், கவுதம் மேனனும் விக்ரமும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனை இயக்குநர் கவுதம் மேனனும் ஒப்புக் கொண்டார். அய்ங்கரன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கப் போவதாகக் கூறப்பட்டது.

ஆனால் அரிமா நம்பி படம் தந்த ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விக்ரம் ஒப்புக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாக இருந்தது. இப்போது அந்தப் படத்தை அய்ங்கரன் நிறுவனத்துக்கு கைமாற்றிவிட்டார் தாணு. இதனைத் தொடர்ந்து, கவுதம் மேனன் - விக்ரம் படத்தை தயாரிப்பதை கைவிட்டுள்ளது அய்ங்கரன் நிறுவனம். 


மேலும் இளம் இயக்குநர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வரும் விக்ரமுக்கு, கவுதம் மேனன் சொன்ன கதையில் அவ்வளவு உடன்பாடு இல்லையாம். இப்போதைக்கு ஆனந்த் சங்கர் படம் மற்றும் இளம் இயக்குநர் ஒருவரின் படங்களில் மட்டுமே நடிக்கிறாராம். விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள படம் நடித்து வரும் விக்ரம், மீண்டும் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம்.

0 comments:

Post a Comment