
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சன்னி லியோனை பாலிவுட்டில் இருந்து விரட்ட நினைக்கிறார். நானும் பாலிவுட் நடிகைதானுங்கோ என்று கூறி வருபவர் ராக்கி சாவந்த். கவர்ச்சியை காட்டி காலத்தை ஓட்டிய ராக்கிக்கு ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட் வந்தது சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சன்னியை விளாசித் தள்ளுகிறார்.
நல்லாத் தான் ஆபாச பட நடிகையை எல்லாமா பாலிவுட்டில் நடிக்க வைப்பது என்று அவ்வப்போது ஒரு பிட்டை போட்டு வருகிறார் ராக்கி. ஆனால் சன்னியோ ராக்கியின் பேச்சை காதில் வாங்குவதே இல்லை.
கவர்ச்சி என்ற ஒன்றே ஒன்றை வைத்து வலம் வந்தார் ராக்கி. இந்நிலையில் சன்னி லியோன் பாலிவுட்டில் நுழைந்து கவர்ச்சிக்கு புது அர்தத்தை கற்பிக்க முயன்று வருவதை ராக்கியால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
சன்னி லியோன் வந்ததால் தான் என்னைப் போன்ற இந்திய நடிகைகள் எல்லாம் ஆடைகுறைப்பு செய்ய வேண்டி உள்ளது. அவ்வாறு செய்தால் தானே சன்னிக்கு இணையாக இருக்க முடியும். நான் நினைத்தால் சன்னியை எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு அசிங்கப்படுத்திவிடுவேன் என்கிறார் ராக்கி.
ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் இங்கே ஆடை அணிவதற்காக தயாரிப்பாளர்கள் அவருக்கு பணம் அளிக்கிறார்கள் என்று ராக்கி சன்னியை தாக்கிப் பேசியுள்ளார்.
0 comments:
Post a Comment