நடிகர்சங்கக்கட்டிடம் கட்டும் பொறுப்பை ஒரு தனியாரிடம் கொடுத்துவிட்டதை எதிர்த்துக்கொண்டிருக்கிறார் நடிகர்விஷால். இதனால் நடிகர்சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோருக்கு எதிராக அவர் செய்ல்படுவதாகவும் விஷாலுக்கு ஆதரவாக இளையநடிகர்கள் ஒருங்கிணைவதாகவும் அவ்வப்போது செய்திகள் வரும். சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் எங்களுக்குள் சிக்கல் எதுவும் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் உள்ளுக்குள் அந்தப்புகைச்சல் இருந்துகொண்டேயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் நடிகர்சங்கத்தின் தேர்தலில் விஷால் உள்ளிட்டவர்கள் போட்டியிடுவார்கள் என்று செய்திகள் வந்தன. கூடவே நடிகர்சங்கத்தில் அதிகமாக உள்ள நாடகநடிகர்களை விஷால் மோசமான வார்த்தைகளில் திட்டினார் என்றும் செய்திகள் வந்தன அதுமட்டுமின்றி விஷால் நடிகர்சங்கப்பொறுப்புக்கு வந்தால் நாடகநடிகர்களையெல்லாம் நீக்கிவிடுவார் என்றும் வதந்திகள் உருவாகின என்று சொல்லப்படுகிறது.
இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காக விஷால், பழம்பெருமை வாய்ந்த புதுக்கோட்டைமுத்தமிழ்நாடகமன்றத்துக்குச் சென்றிருக்கிறார் என்கிறார்கள். அவர் அங்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தெரிகிறது.
அங்குபோய் நாடகநடிகர்கள் மத்தியில் விஷால் பேசியபோது, நம்முடைய சங்கக்கட்டிடம் கட்ட தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை இரத்துச்செய்யவேண்டியதன் அவசியத்தை விளக்கிச் சொன்னதோடு அப்படிச் செய்துவிட்டால் எந்தச்சிக்கலும் இருக்காது என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. நடிகர்சங்கத்துக்குத் தேர்தல் வருகிற நேரத்தில் நடந்திருக்கும் இந்நிகழ்வு பரபரப்பாகியிருக்கிறது.

0 comments:
Post a Comment