Wednesday, May 27, 2015


 ’வாலு’ படம் பல போராட்டங்களை கடந்து ஜூன் மாதம் 12ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது, ஒரு படத்திற்கு இத்தனை முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போடப்பட்ட படம் சிம்புவின் ‘வாலு’ படமாகத்தான் இருக்கும்.'விஸ்வரூபம்’,  ‘மாஸ்’ , ’என்னை அறிந்தால்’ போன்ற படங்கள் கூட இரண்டாவது , மூன்றாவது அறிவிப்பில் ரிலீஸ் உறுதியானது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் ”ஒரே நேரத்தில், பாண்டிராஜுடன் ‘இது நம்ம ஆளு’, கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’, செல்வராகவனின் புதிய படமென தொடர் ஷூட்டிங்கில் இருக்கிறேன்’. வித்தியாசமான அனுபவம், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான ரோல்” என சிம்பு ட்வீட் செய்துள்ளார். 
இது தவிர்த்து ”என் ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எனக்குத் தேவையில்லை, என் ரசிகர்களின் , அன்பும் ஆதரவாலும் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். உங்கள் அன்புக்கு நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சிம்பு. 
இந்நிலையில், பாண்டிராஜ் தனது ட்விட்டரில் , எனது சினிமா வாழ்வில் 'இது நம்ம ஆளு’ படம் மிக முக்கியமான படம். எந்த நிலையிலும் அப்படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் செய்வேன். சிம்பு உங்களை நான் வேறு பரிமாணத்தில் சந்திப்பேன்” என ட்வீட் செய்துள்ளார். 

0 comments:

Post a Comment