Sunday, May 31, 2015

உத்தரப் பிரதேசத்தில் சொத்துத் தகராறுக்காக தன் பெற்றோரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நடிகைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2008ம் ஆண்டு விளம்பர நடிகை பிரியங்கா சிங் சொத்துத் தகராறுக்காக தன் பெற்றோரை தனது நண்பரின் உதவியுடன் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த கொலை வழக்கில் அவருக்கும், அவரது நண்பருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மீரட் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
மேலும், அவர்கள் இருவரும் தலா ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞர் அனில் தோமர் கூறுகையில், ஓய்வு பெற்ற பொறியாளர் பிரேம் வீர் சிங் (65), அவரது மனைவி சந்தோஷ் சிங் (62) ஆகிய இருவரையும், அவர்களது மகளும் விளம்பர நடிகையுமான பிரியங்கா சிங் தனது நண்பரின் உதவியுடன் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அதே ஆண்டு நவம்பர் 17ம் திகதி பிரியங்கா சிங்கும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பொலிஸ் விசாரணையில், சொத்துத் தகராறு காரணமாக தனது பெற்றோரை கொலை செய்ததாக பிரியங்கா சிங் தெரிவித்தார் என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment