Saturday, May 30, 2015


பாம்பே வெல்வெட் படத்தில உயிரக் கொடுத்து நடிச்ச நம்ம அனுஷ்காவுக்கு பேசினபடி பணம் இன்னும் கொடுக்கலையாம், படத்துல நடிக்கிறதுக்காக கொஞ்சம் அட்வான்ஸ் மட்டும் கொடுத்ததோட அதுக்கு அப்புறம் பணத்தைப் பத்தி மூச்சே விடலையாம் படக்குழு , ஆனா படத்தோட ஹீரோ ரன்பீருக்கு மட்டும் பேசின தொகையில ஒரு பைசா மிச்சம் வைக்காம செட்டில் பண்ணியிருக்காங்க.

பாலிவுட்டின் பிரபலமான இயக்குனர் அனுராக் காஷ்யப் படம்னு பொண்ணு உயிரைக் கொடுத்து நடிச்சது, அனுராக் கூட ஒரு பேட்டியில நான் பார்த்ததிலே அனுஷ்கா ஒரு மாதிரி ஒரு ஹீரோயின்ன பார்த்ததே இல்ல, பொண்ணு இந்தப் படத்துக்காக ஒரு நாளைக்கு பல கிலோ எடையுள்ள உடைகளை சுமந்து கிட்டு நடிச்சுக் கொடுத்தாங்க நான் பார்த்ததிலே அனுஷ்காவை தான் நல்ல உழைப்பாளி என்பேன்னு பாட்டு மட்டும் தான் பாடல அந்த அளவுக்கு மனுஷன் புகழ்ந்து தள்ளியிருந்தாரு. ஆனா இப்போ சார் எங்க இருக்காரு தெரியுமா பாரிஸ்ல கோடை சுற்றுலாவ குடும்பத்தோட என்ஜாய் பண்ணிட்டு இருக்காரு.

பாம்பே வெல்வெட் படத்த எல்லாரும் ஆர்வமா எதிர்பார்த்தாங்க ஆனா 110 கோடியில பாண்டம் பிலிம்ஸ் தயாரிச்ச இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ்ல பயங்கரமா சொதப்பிடுச்சு படம் இதுவரைக்கும் வசூலிச்ச மொத்த பணமே 22.7 கோடி தான், இதனால பயங்கரமா நொந்து போன ப்ரோடியுசெர்ஸ் இந்தப் படத்தில நடிச்சவங்களுக்கு மட்டும் இல்லாம மத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பணம் கொடுக்காம இருக்காங்க. நீங்க யாருக்கு வேணாலும் பணம் கொடுக்காம இருக்கலாம் ஆனா படத்துக்கு தன்னோட உழைப்பைக் கொடுத்து முழுமூச்சா நடிச்சுக் கொடுத்த அனுஷ்காவுக்கு இப்படி பண்ணலாமா? நீங்க பேசாம விராட் கோலியக் கூப்பிட்டு வந்து நியாயம் கேளுங்க அனுஷ்கா...

0 comments:

Post a Comment