Friday, May 29, 2015

சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு மே 7 ஆம் தேதி தொடங்கி இருபதுநாட்கள் நடந்து முடிந்துவிட்டது. சென்னை பின்னிமில்லில் கொல்கத்தா போன்று செட் போட்டு காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த இருபது நாட்களிலும் திட்டமிட்டபடி எல்லாமே சரியாக நடந்துவிட்டது ஒரேயொரு குறையைத் தவிர என்கிறார்கள். அப்படி என்ன குறை? படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன்தான் என்று சொல்லுகிறார்கள். படப்பிடிப்பு நாட்களில் தினமும் காலை ஏழு மணிக்கெல்லாம் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்களாம். சிலநாட்கள் அஜித்தும் அப்போதே வந்துவிட்டாராம். 

ஆனால் எல்லாநாட்களிலும் படப்பிடிப்புக்குத் தாமதமாகவே வந்தவர் ஸ்ருதிஹாசன் மட்டும்தான் என்று சொல்கிறார்கள். இதனால் சில நாட்கள் அவருக்காக எல்லோரும் காத்திருக்க நேரிட்டது என்று சொல்கிறார்கள். இது தொடர்பாகப் பலமுறை அவரிடம் சொல்லியும் அவருடைய நேரத்துக்குத்தான் வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இயக்குநர் சிறுத்தைசிவா திட்டமிட்டதைக் காட்டிலும் வேகமாகப் படப்பிடிப்பை நடத்திமுடித்துவிடுகிற அளவு வேகமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறாராம்.

அந்த வேகத்துக்கேற்ப ஸ்ருதி வரவில்லையென்பதால், அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக அவரிடம் பேச்சு நடத்தி சரிசெய்துவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம். அந்தப்பேச்சில் ஸ்ருதியின் அன்றாட செலவுகளும் அடக்கம் என்றும் சொல்லப்படுகிறது. 

அந்தஅளவு  அவருடைய செலவுக்கணக்கு அதிகமாக இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் ஸ்ருதியைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் முன்பே சொல்லிவிடுவார் சொல்லியபடி நடப்பார்  திடீரென்று ஒரு மாற்றம் சொன்னால் செய்யமாட்டார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள். இங்கு என்ன பேசப்பட்டதோ?

0 comments:

Post a Comment