Saturday, May 30, 2015


அஜித் படத்திற்கு வந்த ரகசிய கடிதம்? குழப்பத்தில் ஏ.எம்.ரத்னம் - Cineulagam

தமிழ் சினிமாவில் அஜித் படங்கள் என்றாலே எல்லோரிடத்திலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தல-56 படம் சிவா இயக்கத்தில் அனைவரின் எதிர்ப்பார்ப்பு உரிய படமாக உள்ளது.

இப்படத்தை பற்றி தினமும் ரசிகர்கள் கடிதம் எழுதி ஏ.எம்.ரத்னத்திற்கு அனுப்பி வைப்பார்களாம். இதில் முழுவதும் அஜித்தின் நலம் விசாரிப்புக்கள் தான் இடம்பெறுமாம்.

ஆனால், அப்படி நினைத்து தான் கடந்த வாரம் ஒரு கடிதத்தை படித்தாராம் ரத்னம். இதில் ‘உங்களுடைய படத்தின் கதை அப்படியே எங்கள் படமான பாட்ஷா படத்தில் காப்பி என்று கூறுகிறார்கள், இதற்கு முறைப்படி நீங்கள் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் இருந்ததாம்.

படத்தின் கதையே வேறு, ஆனால், இவர்களாகவே ஒரு கதை சொல்லி நம்மை சிக்க வைத்து விடுவார்கள் போல என்று எண்ணி குழப்பத்தில் இருக்கிறாராம் ரத்னம்.

0 comments:

Post a Comment