உதயநிதி நடிக்கும் பேய்ப்படம்?
நண்பேண்டா' படத்திற்கு பின்னர் 'கெத்து' படத்தில் நடித்து கொண்டிருக்கும் உதயநிதி, இந்த படத்தை முடித்துவிட்டு 'என்றென்றும் காதல்' இயக்குனர் அகமதுவின் இயக்கத்தில் ஒரு காதல் மற்றும் காமெடி படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த திட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு சிறிய மாற்றத்தை செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அகமது ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த காதல் மற்றும் காமெடி கதைக்கு பதிலாக தனக்கு பொருத்தமான ஒரு பேய்க்கதையை தயார் செய்யும்படி உதயநிதி கூறியதாகவும், அதற்கு ஓகே சொன்ன அகமது, காமெடி கலந்து பேய்க்கதை ஒன்றை தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் தனது சகோதரர் அருள்நிதியின் 'டிமாண்ட்டி காலனி' உள்பட பல பேய்ப்படங்கள் கோலிவுட்டில் வெற்றி பெற்று வருவதால் உதயநிதிக்கும் பேய்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்றும் ஆசை வந்துவிட்டதாக கூறப்படுகிறது. உதயநிதியின் பேய்ப்படத்திலும் சந்தானம் இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment