ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து, 1996 மே மாதம் வெளியாகி ஹிட் அடித்த படம் இந்தியன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கவுண்டமணி, செந்தில், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியானது. இதன் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகின்றன.
இந்தியன் படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்துடன் ஷங்கர் பேசிவருவதாகவும், ஷங்கரின் உதவியாளர்கள் இந்தியன் 2க்கான பட வேலையில் இருப்பதாகவும் தகவல்கள் பரவத் தொடங்கின. இதைப்பற்றி தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் கேட்டபோது, “ அஜித் படத்திற்கான வேலையில் பிஸியாக இருக்கிறேன். இயக்குநர் ஷங்கருடன் இந்தியன் பாகம் 2 பற்றி எதுவும் பேசவில்லை” என்று திட்டவட்டமாக மறுக்கிறார்.

0 comments:
Post a Comment