Thursday, May 28, 2015

இந்தியன்-2 வருகிறதா? மனம் திறந்த ஏ.எம்.ரத்னம் - Cineulagam
கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்திற்கு பிறகு எந்திரன் படத்தில் இந்த கூட்டணி இணைவதாக இருந்து, பின் அந்த படத்தில் ரஜினி நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்தியன் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்கிறார், அஜித் நடிக்கிறார் என பல வதந்திகள் பரவி வந்தது.
இது குறித்து ஏ.எம்.ரத்னம் அவர்களிடம் கேட்ட போது ‘அஜித் படத்திற்கான வேலையில் பிஸியாக இருக்கிறேன். இயக்குநர் ஷங்கருடன் இந்தியன் பாகம் 2 பற்றி எதுவும் பேசவில்லை’என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment