Wednesday, May 27, 2015

தொடரும் லிங்கா பிரச்சனை: ரஜினி பெயரில் மோசடியா? - Cineulagam
சூப்பர்ஸ்டார் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி தோல்வியை சந்தித்ததாக கூறப்படும் படம் லிங்கா.
இப்படத்தால் தங்களுக்கு பல கோடி நஷ்டமடைந்தது என்று கூறி விநியோகஸ்தர்கள் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.
இதனையடுத்து ரஜினி சார்பில் தலையிட்ட திருப்பூர் சுப்பரமணியம் என்பவர் ரூ. 12.50 கோடி தருவதாகவும், வேந்தர் Movies தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து மீதமுள்ள கடனை அடைப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு சமாதானமடைந்தனர்.
ஆனால் இதுவரை ரூ.5 கோடி 89 லட்சம் மட்டுமே தந்துள்ளனராம். மீதமுள்ள தொகையை தற்போது தராமல் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தாணு, சுப்பிரமணி ஆகியோர் ஏமாற்றுகின்றனர் என்று கூறி மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர்.
இந்த பிரச்சனையில் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment