ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் நாகர்ஜுனா, மகேஷ் பாபு, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதிஹாசன் ஆகியோரை வைத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்க இருக்கிறாராம்.
இந்த படத்தை பற்றிய அறிவிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பே எதிர்ப்பார்க்கப்பட்டது.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் கூறுகையில், நான் சினிமாவில் அறிமுகமானதே இயக்குனர் மணி சாரின் இருவர் ( இட்டரு ) படம் மூலம் தான். ஒரு இடைவெளிக்கு பிறகு நான் நடிக்கும் இந்த படத்தையும் மணிரத்னம் இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதுவெகு விரைவில் நடக்கும் என்றார்.
இந்த படத்தில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்க இருக்கின்றனர்.
0 comments:
Post a Comment